[X] Close >

சென்னை டெஸ்ட்: ஜோ ரூட் இரட்டைச் சதம்! - அசுரபலத்தில் இங்கிலாந்து

Joe-Root-double-century-makes-England-in-a-command-against-India

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.


Advertisement

image

சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து நேற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. இதில் தொடக்க வீரர் டோம் சிப்லே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் நேற்றைய தினமே சதமடித்துவிட்டார். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.


Advertisement

image

இந்நிலையில். இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் விரைவாக 82 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரூட் 200 ரன்களை கடந்தார். 100-ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 458 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close