கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அலுவலக கழிவறையில் சிசிடிவி கேமரா வைத்து பெண்களை படம் பிடித்த சஞ்சு என்பவரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் சஞ்சு (29). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செட்டிகுளம் பகுதியில் Z-3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதையடுத்து அந்த நிறுவனத்தில் மூன்று பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென பெண்கள் கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளை சஞ்சு செய்து வந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் அவரிடம் இதற்கான விளக்கத்தை கேட்டனர். ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை தொடர்ந்து அந்த பெண்கள் கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சஞ்சுவை கைது செய்ததுடன் அவர் பொருத்திய சிசிடிவி கேமரா, லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு