[X] Close >

ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகிறது அஜித்தின் 'வலிமை'?

Valimai-movie-will-be-released-on-August

அஜித் நடிப்பில் உருவாகும் ’வலிமை’ திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

’நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதால் ஏப்ரல் 29-ம் தேதி படம் வெளியாகும் என்று தகவல் வெளியானது.

ஆனால் படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். அதில் எந்த நாட்டை தேர்வு செய்வது, அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்விகள் உள்ளதால் ஏப்ரல் மாதத்தில் வலிமை படம் வெளியாவதற்கு சிக்கல் என்று கூறுகின்றனர். அதன் காரணமாக நேர்கொண்ட பார்வை வெளியான ஆகஸ்ட் 2-வது வாரத்தில் படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

இதன் காரணமாக வலிமை படம் ஆகஸ்ட் மாதம்தான் வெளியாகும் என்று திரைத்துறையில் கூறுகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close