சசிகலா விரைவில் குணமாகி நல்லமுறையில் தமிழகத்திற்கு வர வேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம் என அயனம்பாக்கத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டியளித்தார்.
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜன், அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...
“ ஜனவரி 31-ஆம் தேதிக்குள் திருவேற்காட்டில் 15 மினி கிளினிக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 51 மினி கிளினிக்கும் விரைவில் திறக்கப்படும். முதற்கட்ட தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளது. அடுத்ததாக மக்கள் பிரதிநிதிகளுக்கு போடப்படும்.
தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் ஊசி போட்டுக் கொண்டுள்ளார். டாக்டர் என்ற அடிப்படையில் அவர் போட்டுக் கொண்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போடும்போது நாங்கள் முதல் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.
பிரேசில் நாட்டு அதிபர் இந்தியாவிற்கு நன்றி சொல்கிறார். இங்கு உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவது அநீதி. கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் 2 மாதங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் ஆகிவிடும். பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் அடுத்த அடுத்த அலை உருவாக வாய்ப்பாக அமைந்துவிடும். அவனை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
சசிகலா விரைவில் குணமாகி நல்லமுறையில் தமிழகத்திற்கு வர வேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்’‘ எனத் தெரிவித்தார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!