இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன் பின்பு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் பிப்ரவரி 5 - 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாவதுப் போட்டி பிப்ரவரி 13 - 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணிக்கு திரும்புகிறார்கள். ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மார்க்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
Loading More post
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி