[X] Close >

“உங்களது ஆதரவிற்கும், எல்லையற்ற அன்பிற்கும் நன்றி” - நடராஜன் நெகிழ்ச்சி ட்வீட்!

T-Natarajan-Tweets-about-his-experience-with-Indian-Team-at-Australia-Tour-and-overwhelmed-for-support

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக களம் இறங்கி விளையாடி வருபவர் தங்கராசு நடராஜன். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு வீரர்களையே ஆட்டம் காண செய்தவர் நட்டு. 


Advertisement

காபாவில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்த கிரிக்கெட் பயண அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நட்டு. 

“கடந்த இரண்டு மாதங்கள் மிச்சிறப்பாக இருந்தன. இந்திய கிரிக்கெட் அணி உடனான இந்த பயணம் என் வாழ்வின் மிகச் சரிந்த தருணமாகும். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதெல்லாம் பெருங்கனவு. இந்த தொடரை வெல்ல பல தடைகளை நாங்கள் கடந்துள்ளோம். உங்களது எல்லையற்ற ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி” என ட்வீட் செய்துள்ளார் நடராஜன். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close