உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் தெருநாய் ஒன்று 'ஹாயாக' படுத்துக்கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், இறந்துபோன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனத்தை பெற்றது. இந்த சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து உள்ளது.
மொராதாபாத் மாவட்டம் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பண்டிட் தீன் தயால் உபாத்யாய் அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் பெண் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் உள்ள படுக்கை ஒன்றில் தெருநாய் ஒன்று சாகவாசமாக படுத்துக்கிடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.
A scene from the female surgical ward of the district hospital in UP's Moradabad.
Recently a dog was found licking blood from the corpse of an accident victim at the district hospital in neighbouring Sambhal district.
Video credit: @SiddquiShariq @Benarasiyaa pic.twitter.com/IRJy1rKT54 — Kanwardeep singh (@KanwardeepsTOI) January 12, 2021
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறும்போது, 'நாய் இருந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட வார்டு, நோயாளிகள் இன்றி காலியாகத்தான் இருந்தது என்றும் முழுமையான விசாரணைக்கு பின்னர் பொறுப்பில் இருந்த ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?