கான்க்ரீட் சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் 3 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 32 வயதான ஒரு பெண்ணும், 30 வயதான இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் தஞ்சமானார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் திருமணத்தில் ஆர்வம் காட்டாத அந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழலாம் என்று முரண்டு பிடித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருவருக்குமிடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசமடைந்த காதலன் தனது காதலியை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் அப்பெண்ணின் உடலை தனது வீட்டிலுள்ள குளியலறையில் உள்ள சுவற்றுக்குள் கான்க்ரீட் வைத்து பூசியுள்ளார்.
இந்நிலையில் வெகு நாட்களாக அந்த பெண் தங்களுடன் தொடர்பில் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அந்த இளைஞர் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அந்த காதலன் வீட்டை சோதனையிட்டபோது வீட்டின் குளியலறையில் புதிதாக சிமெண்ட் பூசியுள்ளதை கண்டு அதை இடித்து பார்த்தபோது உள்ளே அப்பெண்ணின் உடல் எலும்புக்கூடாக இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்கள். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர். .
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!