சூழலியல் பாதிப்புகளை உருவாக்கும் அதானி குழும காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு அதிமுக - பாஜக அரசுகள் உதவுவது ஏன்? என திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். “அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு தேவியான நிலங்களை பொது மக்களிடமிருந்தும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு கழத்திடமிருந்தும் அள்ளிக் கொடுக்க பொது மக்களின் கருத்துக் கேட்கும் பொது விசாரணை அறிவிக்கப்பட்டு அதிகார துஷ்பிரயோகம் நடைபெற இருக்கிறது.
1 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம், 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம், பழவேற்காடு ஏரியின் பகுதிகள் அழியும் சூழல் என தமிழகத்தில் பொருளாதார - சூழலியல் பாதிப்புகளை உருவாக்கும் அதானி குழும காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு அதிமுக - பாஜக அரசுகள் உதவுவது ஏன்?#StopAdaniSavePulicat pic.twitter.com/qhrtFP8yez
— M.K.Stalin (@mkstalin) January 13, 2021Advertisement
1967 ஏக்கர் அளவிற்கான பரப்பளவை மணல் கொட்டி - நிலத்தின் தன்மையை உருமாற்றி துறைமுக விரிவாக்கம் ஏன்?
82 மீனவ கிராமங்களில் உள்ள 1 லட்சம் மீனவர்கள் இந்தப்பகுதியின் மீன் நம்பி இருக்கிறார்கள். இத்திட்டத்தால் மீனவ கிராமங்கள் கடலுக்குள் போகும்.
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, உவர் நீர் ஏரியான பழவேற்காடு அழிந்துபோகும்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள35 லட்சம் மக்களுக்கு வெல்ல அபாயத்தில் மூழ்கும் அபாயம் இருக்கும்.
ஆரணி - கொற்றலை ஆற்றின் நன்னீர் பாதிக்கப்பட்டு இந்த ஆறுகளே காணாமல் போகும்.
இந்த விரிவாக்க திட்டம் மக்களுக்கும் - சூழலியலுக்கும் பரம விரோதியாக அமைந்திருக்கிறது என்பதை அதனிக்காக வரிந்து காட்டும் பாஜக - அதிமுக அரசுகள் யோசித்துப் பார்க்கவில்லை.
இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்லும் நடவடிக்கைகளையும் இந்த அரசுகள் எடுக்கக் கூடாது” என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!