பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நபர். பிறந்த நாளில் சோகமுடிவு நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் மேல் வழித்துனையாங்குப்பத்தை அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ஹேமாத் குமார். இவரது பிறந்த நாளை நண்பர்களான அஜித், திலீப் ஆகியோர் நேற்று இரவு அங்குள்ள சாலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராபின் (28), ரீகன்ராஜா (38) மற்றும் சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த சின்னா (25) ஆகியோருக்கும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை ராபின், ரீகன், சின்னா ஆகியோர் பேனாகத்தி மற்றும் பிளேடால் சரமாரியாக தாக்கியதில் பலத்த படுகாயமடைந்த அஜித் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை தடுக்க வந்த அஜித்தின் சித்தப்பா வேலு எனபவருக்கும் காத்தி குத்து விழுந்ததில் குடல் சரிந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.
இதில், திலிப்பிற்கு தோள்பட்டையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக ராபின், ரீகன், சின்னா ஆகிய மூன்று பேரை கைது செய்த மேல்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த அஜித்துக்கும், ராபின், ரீகன் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் முன்விரோதம் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!