'கேஜிஎஃப் 2' டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 3 மில்லியன் லைக்குகளைக் குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ திரைப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், கேஜிஎஃப் ஹீரோ யாஷ் பிறந்தநாளையொட்டி நேற்றிரவே ஸ்வீட் சர்ப்ரைஸாக டீசரை வெளியிட்டது படக்குழு. இதனை ட்விட்டர் முழுக்க ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள் கேஜிஎஃப் ரசிகர்கள். டீசர் வெளியான 16 மணி நேரத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை 3 மில்லியன் லைக்குகளை வாரி குவித்திருக்கிறார்கள் ரசிகர்கள். விஜய்யின் மாஸ்டர், ஆர்.ஆர்.ஆர், சர்கார், மற்றும் மெர்சல் படங்களின் டீசர்கள் முதல்நாளில் குவித்த லைக் சாதனைகளையெல்லாம் கேஜிஎஃப் 2 முறியடித்துள்ளது.
கேஜிஎஃப் 2 டீசர் வெளியான முதல் நாளில் இதுவரை 3 மில்லியன் லைக்குகளை குவித்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு மாஸ்டர் டீசர் வெளியான அன்று 1 மில்லியன் 85 லைக்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், ’கேஜிஎஃப் 2’ புதிய 30 மில்லியன் பார்வையாளர்களையும் 3 மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளதால், கேஜிஎஃப் படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு