செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்பட்டு நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் இசை மற்றும் பிஜிஎம்-க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல், ட்ரெய்லர் வெளியான போது எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கூடியது.
நெஞ்சம் மறப்பதில்லை எப்போது வெளியாகும் என்று செல்வராகவனிடம் கேட்டு கேட்டு அவரது ரசிகர்களிடம் சலித்து போனார்கள். இந்த எதிர்பார்ப்பு முக்கியமான காரணம் நெஞ்சம் மறப்பதில்லை செல்வராகவனுக்கே உண்டான தனித்தன்மையில் இந்தப் படம் இருந்து நிச்சயம் தங்களை இரண்டாம் உலகம் போல் ஏமாற்றாது என்று ரசிகர்கள் நம்பினார்கள். மாதங்கள் கடந்து, வருடங்களும் கடந்தது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு நெஞ்சம் மறப்பதில்லை குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை ஓடிடியில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சினிமா நோக்கர்கள் பலரும் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
Very soon, #NenjamMarappadhillai will have its OTT deal sealed and signed. — S Abishek Raaja (@cinemapayyan) January 7, 2021
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!