ஜனவரி 28 ஆம் தேதி பொதுவிடுமுறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தத்திருவிழாவானது இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனோசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், இந்தத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். அதனடிப்படையில் ஜனவரி 28 ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, “ நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மக்கள் தொடர்ந்து என்னிடம் தைப்பூசத் திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் ஜனவரி 28 ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் ஜனவரி 28 ஆம் நாளானது, பொதுவிடுமுறை நாளாகும்” என்றார்.
Loading More post
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!