டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 41 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இன்று 41ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரசுடன் நடந்த 7ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில், 3 சட்டங்களையும் திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறினர். ஆனால் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரலாம் சட்டங்களை வாபஸ் பெற இயலாது என அரசும் உறுதியாக கூறிவிட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து வரும் 8 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் முனைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லிக்கு டிராக்டர் மூலம் பேரணியாக செல்லப்போவதாகவும், வரும் 13 ஆம் தேதி போகிப் பண்டிகையன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடப் போவதாகவும் விவசாய அமைப்புகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?