இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீராங்கனையும், ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்திய ராணி என்ற பெருமையும் கொண்ட ’வேலு நாச்சியார்’ வாழ்க்கை வரலாற்று படத்தை, சுசி கணேசன் இயக்க வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் பரவி வந்ததையடுத்து நயன்தாரா தற்போது, விளக்கம் கொடுத்து அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையில்,
”ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று ஊடகங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன. நயன்தாரா அப்படத்தில் திட்டவட்டமாக நடிக்கவில்லை. அவரது கருத்தை நாங்கள் இந்த அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு பகிர்கிறோம். இது ஒரு ஆதாரமற்ற வதந்தி. ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே, நயன்தாரா காஷ்மோரா, சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் ராணி வேடம் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!