வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு செய்ய உள்ளனர். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்று நம்புவதாக மத்திய வேளாண் அமைச்சர் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் இன்று 28 வது நாளை எட்டியுள்ளது. டெல்லியில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநில எல்லைகளை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தையும் தொடங்கியுள்ள விவசாயிகள், போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. கடந்த 9 ஆம் தேதி நடைபெற இருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்தானது. கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ள மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இன்று முடிவு செய்ய உள்ளனர்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்