தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவு சந்தையான மகாசாய் சந்தையில் இறால் விற்ற 67 வயதான பாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரிடமிருந்து வைரஸ் பரவத் தொடங்கி, 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா பரவிய நாடு தாய்லாந்து. சற்று கொரோனா தாக்கம் தணிந்திருந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தாய்லாந்தின் தலைநகரான பங்காக்குக்கு அருகே அமைந்துள்ளது சமூத் சகோன் என்ற மாகாணம். இந்த மாகாணத்தில்தான் தாய்லாந்தின் மிகப் பெரிய கடல்சார் உணவுப்பொருள் சந்தையாக விளங்கக்கூடிய மாகாசாய் சந்தை இருக்கிறது.
இந்தச் சந்தையிலிருந்து மீண்டும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்த மாகாணத்தை முழுமையாக மூட தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சந்தையில் அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். அந்தத் தொழிலாளர்களை வெளியே வரவேண்டாம் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தாய்லாந்திலும் நிலமை மோசமாக இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த அளவுக்கு மீண்டும் தாய்லாந்தில் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாய்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, ''தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவு சந்தையான மகாசாய் சந்தையில் இறால் விற்ற 67 வயதான பாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரிடமிருந்து வைரஸ் பரவத் தொடங்கி, 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் வேகமாக பரவியுள்ள தொற்றில் பெரும்பாலானோர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்" என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சந்தை மூடப்பட்டு தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அந்த 67 வயது மூதாட்டியோ வெளிநாடு எதுவும் செல்லவில்லை. பின்னர், எப்படி அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து, அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
சுகாதாரத்துறை செயலாளர் கெப்ட்கும் வாங்கிட் கூறுகையில், ''மகாசாய் சந்தையில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம், அவர்கள் வெளியில் எங்கும் செல்லவேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் அவர்களின் வசிப்பிடங்களிலேயே வழங்கப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் பலரும் எந்தவித அறிகுறிகளும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரேநாளில் சுமார் 360 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் அங்கு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு, சமூத் சகோன் மாகாணத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ''இந்தக் கொரோனா சுழற்சியை விரைவில் தடுக்கவேண்டும், ஏற்கெனவே நமக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறது" என தாய்லாந்தின் பிரதமர் ப்ரியூத் சன் ஓசா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?