பாவனா கடத்தலில் திலீபுடன் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு தொடர்பு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பின் நண்பரான காங்கிரஸ் எம்எல்ஏ அன்வர் ஷாதத்துக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. 
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பாவனா கடத்தப்பட்ட அன்று எம்எல்ஏவும், திலீப்பும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திலீப்பின் 2 நாள் போலீஸ் காவல் முடிந்து இன்று அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இந்நிலையில், நடிகர் கலாபவன் மணியின் சந்தேக மரணத்தில், நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக, மலையாள இயக்குநர் பைஜூ கொட்டாரக்கரா கூறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர் கொச்சியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கலாபவன் மணியுடன் சேர்ந்து ஏராளமான சொத்துகளை திலீப் வாங்கியுள்ளதாக, கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணா, கேரள போலீசாரிடம் பல மாதங்களுக்கு முன்னர் அறிவித்ததாக பைஜூ கொட்டாரக்கரா கூறியிருக்கிறார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement