[X] Close >

ஆன்லைனில் திருமண நிகழ்ச்சி.. சில நிமிடங்களில் வீட்டிற்கே வரும் கல்யாணச் சாப்பாடு

From-pachadi-to-payasam-Chennai-caterers-are-delivering-wedding-feasts-to-guests

திருமண விருந்தை வீட்டுக்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறார்கள் சென்னையில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனம். உள்ளனர்.


Advertisement

தென்னிந்திய திருமணங்களில் முக்கியத்துவம் பெறுவது, சொந்த பந்தங்களை உபசரிப்பது மற்றும் திருமண விருந்துகள்தான். ஆனால், கொரோனா  காரணமாக, தென்னிந்திய திருமணங்களில் பெரிய மாற்றங்களை சந்தித்தது கண்கூடு. மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை தவிர எல்லோரும் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியோடு, வீட்டில் இருந்தபடியே, இன்டர்நெட் உதவியுடன் நேரடி ஒளிபரப்பாக கண்டுகளித்தனர்.

நேரில் வரமுடியாமல் ஆன்லைனில் திருமண நிகழ்ச்சியை காண்பவர்களுக்குகாக புதிய முறையில் விருந்து உபச்சாரங்களை ஏற்படுத்தி உள்ளது, சென்னையின் அறுசுவை அரசு என்னும் கேட்டரிங் குழுமம். இவர்கள் திருமண விருந்தை வீட்டு வாசலிற்கே கொண்டு வந்து தரும் புது முயற்சியை கையாண்டு உள்ளனர்.


Advertisement

திருமண விருந்தின் அனைத்து உணவு வகைகளும் நன்றாக பேக் செய்து வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள், அதுவும் திருமணம் முடிந்த உடன் உண்ணவும், சூடாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள், சோழிங்கநல்லூரில் உள்ள அறுசுவை அரசர்  கேட்டரிங் குழுமம். இதுவரை இதுபோன்று 125 திருமண விருந்து பார்ஸல்கள் டெலிவரி செய்து உள்ளனர். அப்பளம் ,பச்சடி முதல் பாயசம் வரையிலான அனைத்து உணவுகளும், வாழை இலையும் சேர்த்தே தருகின்றனர்.

திருமண விருந்துகளில் இன்னொரு முக்கியமான விஷயம் , பச்சடிகூட்டு, காய்கறி, குழம்பு வகைகளை பரிமாறும் விதம். அதை எந்த வரிசையில் இலையில் வைக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதை சரிசெய்ய, அவர்கள் வாழை இலையிலும் , ஒரு துண்டு பிரசுரத்தத்தில்  அதற்கான குறிப்புகளையும் வைத்து உள்ளார்கள். இதில் 36 வகை உணவுகளும் அப்பளங்கள் வீட்டில் வறுத்துக்கொள்ள குறிப்புடன் வீட்டை வந்து அடைகின்றது இந்த ஆன்லைன் திருமண விருந்து.

சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், புளி சாதம், மோர் குழம்பு சாதம், சிறிய உருளை கிழங்கு பொறியல், அவியல், பருப்பு உசிலி, இனிப்பு பச்சடி, தயிர் பச்சடி,பால் பாயாசம், மற்றும் பாதாம் பால் உள்ளிட்டதோடு மட்டுமன்றி, வறுவல்கள், ஊறுகாய், வடை, இன்னும் பல  வகையான காய்கறி வகைகளும் செய்து ஹாட் பாக்ஸில் பேக் செய்து பனை ஓலை கூடைகளில் சூடு குறைத்தாயாத படி பேக் செய்து, தண்ணீர் பாட்டில், டிஸ்ஸு நாப்கின், ஸ்பூன், பேப்பர் கப் என திருமண விருந்தில் சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தும் பொருட்டு அனைத்தையும் தருகிறோம் என்கிறார் அறுசுவை அரசு கேட்டரிங் குழுமத்தின் உரிமையாளரான ஸ்ரீதர் நடராஜன்.


Advertisement

திருமணத்திற்கான தாம்பூல பைகளும் ஏற்பாடு செய்து வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கின்றனர். இவர்கள் சோழிங்கநல்லூரிலிருந்து அண்ணா நகர், மயிலாப்பூர், மந்தவெளி, வடபழனி வரை அனைத்து இடங்களுக்கும் திருமண விருந்து டெலிவரி செய்கிறார்கள்இந்த திருமண விருந்துகள் மதியம் 1 மணிக்கு முன்னதாகவும், சூடாகவும் கிடைக்கச்செய்வதே எங்கள் குறிக்கோள், அதை வெற்றிகரமாக செய்தும் வருகிறோம் என்கிறார், ஸ்ரீதர். இவர்கள் இதுவரை, 5 திருமண நிகழ்வுகளுக்கு உணவு விருந்துகள் டெலிவரி செய்து உள்ளனர்.

இதேபோல் சென்னையில் உள்ள தாஜ் கன்னிமேரா  ஹோட்டலிலும்  திருமண நிகழ்வுகளுக்கான விருந்து உணவுகளை உறவுகளின் வீட்டிற்கே கொண்டு சேர்க்கிறோம் என்கிறார், அந்த ஹோட்டலின் பணியாளர் ஒருவர்இதேபோல் கேரளாவின் திருச்சூரிலும், கேட்டரிங் குழுமம் பாயச வகைகளையும், மேலும் பலதரப்பட்ட இனிப்பு வகைகளையும் மூன்று சக்கர வாகனங்களில் மக்களிடம் கொண்டு சேர்கிறார், அவ்வூரை சேர்ந்த சுரேஷ் அம்பிஸ்வாமியின் கேட்டரிங் நிறுவனம்.

நன்றி: The News Minute

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close