நாகையில் பெய்துவரும் கனமழையால் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தை அடுத்துள்ள காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. நாகையில் கடந்த 4 தினங்களாக வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் ஒருபகுதியான 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் காடம்பாடி திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் தார்பாலின் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைநீர் தேங்குவதால் நெல் மூட்டைகளின் அடிப்பகுதி சேதமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, நகராட்சி ஊழியர்களின் உதவியோடு மழைநீரை வடியவைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?