[X] Close >

திருவாரூரில் காற்றுடன் தொடங்கியது கனமழை, பல இடங்களில் மின்விநியோகம் துண்டிப்பு

nivar-cyclone--Heavy-rain-with-wind-in-Thiruvarur--power-outages-in-many-places

நிவர் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியுள்ளது, இதன்காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


Advertisement

imageimage

நிவர் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கடலூர் முதல் சென்னை வரை கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் 80 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசும் என்றும் இரவு முதல் தொடர் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியுள்ளது கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எரவாஞ்சேரி ஆண்டிபந்தல் சன்னாநல்லூர் பூந்தோட்டம் பேரளம் மாப்பிள்ளை குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று அதிகமாக வீசுவதால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இரவு முதல் கனமழை பெய்யும் என்பதால் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close