கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா: ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

Shooting-spot-stills-of-surya-new-movie

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'நவரசா' பட ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன


Advertisement

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாய 'சூரரைப் போற்று' ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டியராஜனுடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் “வாடிவாசல்” உள்ளிட்டப் படங்களில் நடிக்க இருக்கிறார்.

image


Advertisement

இதனிடையே ஓடிடி தளத்திற்காகவும் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த சூர்யா அந்தத்தகவலை உறுதி செய்ததுடன், அப்படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

image

முன்னதாக பி சி ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கிற்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

image

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement