தேர்தல் தோல்வி: காங்கிரஸை விமர்சிக்கும் ப.சிதம்பரம்..!

The-Times-of-India-Chidambaram-joins-Cong-critics--Adhir-says-dissenters-can-leave

பீகார் மாநிலத் தேர்தலிலும், பிற மாநில இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்வியை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.


Advertisement

image

முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் தனது அறிக்கையில் "பீகார் மற்றும் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நான் அதிகம் கவலைப்படுகிறேன். இந்த முடிவுகள் மூலமாக களத்தில் கட்சிக்கு எந்தவொரு அமைப்பு வலிமையும் இல்லை அல்லது கட்சி கணிசமாக பலவீனமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

மேலும் "பீகாரில், ஆர்ஜேடி-காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு மிக நெருக்கமாக இருந்தபோதிலும் நாம் ஏன் தோற்றோம் என்பதுபற்றிய விரிவான மறுஆய்வு தேவை. நினைவில் கொள்ளுங்கள், சில காலத்திற்கு முன்புகூட காங்கிரஸ் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்றது " எனக்கூறியுள்ள அவர் களத்தில் கட்சியின் அமைப்பு வலிமையை அறியவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 23 பேர் எழுதிய கடிதம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, சமீபத்திய தேர்தல் படுதோல்விகளுக்கு பின்னர் ப.சிதம்பரம் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ராகுல் காந்திக்கு நெருக்கமான கட்சி செயற்பாட்டாளர்கள் பற்றியும், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஜி 23 உறுப்பினர்கள் கலந்துரையாடினர். கட்சியின் சறுக்கல் பற்றி விவாதிக்க சி.டபிள்யூ.சி போன்ற கட்சி குழுவின் சிறப்பு அமர்வுக்கு இந்த முகாம் கேட்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

image


Advertisement

இதுபற்றி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி "சில தலைவர்கள் காங்கிரஸ் தங்களுக்கு சரியான கட்சி அல்ல என்று நினைத்தால், அவர்கள் ஒரு புதிய கட்சியை அமைக்கலாம் அல்லது முற்போக்கானவர்கள் என்று நினைக்கும் வேறு எந்த கட்சியிலும் சேரலாம் மற்றும் அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப காங்கிரஸின் நம்பகத்தன்மையை அழிக்கக்கூடிய இதுபோன்ற சங்கடமான செயல்களில்  ஈடுபடக்கூடாது" என தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement