சீனா: ஆற்றில் விழுந்த இளம்பெண்.. அதிரடியாய் காப்பாற்றிய பிரிட்டிஷ் தூதர்.!

British-diplomat-Stephen-Ellison-saves-drowning-woman

ஆற்றில் எதிர்பாராத விதமாக விழுந்து தத்தளித்த பெண் ஒருவரை பிரிட்டிஷ் தூதர் காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

61 வயதான ஸ்டீபன் எலிசன் என்பவர் சீனாவின் ஜாங்ஷன் நகராட்சி தூதுவராக பணியாற்றி வருகிறார். இவர் ஜாங்ஷன் கிராத்திற்கு அருகே உள்ள சுற்றுலாத் தளத்தை பார்வையிட்டிருந்த போது, 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கிருந்த ஆற்றினுள் தடுமாற்றி விழுந்தார். அலறல் சத்தத்துடன் தண்ணீரில் தத்தளித்த அப்பெண், சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்த நிலையில் ஆற்றில் கிடந்தார்.

இதனைப்பார்த்த ஸ்டீபன் எலிசன், உடனடியாக தனது காலில் இருந்த ஷூக்களை கழற்றி எறிந்து விட்டு ஆற்றில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றினார். இதனை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி மக்களின் பாராட்டைப்பெற்று வருகிறது. தற்போதுவரை இந்த வீடியோ 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.


இது குறித்து அவர் கூறும் போது “ சுயநினைவு இழந்த நிலையில் ஆற்றில் கிடந்த அவரின் மூச்சு விடும் செயல்முறையும் நின்று போனது. அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தவுடன் மீண்டும் அவர் சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார்” என்றார். இது குறித்து சீனாவில் உள்ள இங்கிலாந்து தூதகரம், தூதரின் இந்த துரிதமான செயல் பெருமிதம் கொள்ளச் செய்வதாக கூறியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement