கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவிகிதம் சுருங்கியுள்ளது, அதாவது இந்த நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குள் நுழைகிறது.
கொரோனா பொதுமுடக்கத்தின் தளர்வுகளுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறிவருகிறது, இருப்பினும் இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) 8.6 சதவீதமாக சுருங்கியுள்ளது என்று ரிசர்வ் வங்கி சார்பிலான அதிகாரபூர்வ கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே மிகப்பெரிய அளவில் சரிந்த ஜிடிபி, அதன் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக தொழில்நுட்ப மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்று மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது என்று ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் தனது மாதாந்திர கட்டுரையில் எழுதியுள்ளார்.
கடந்த 27 மாத பொருளாதார புள்ளிவிபரங்களை கண்காணிக்கும் ஒரு பொருளாதார செயல்பாட்டுக் குறியீடு, மே / ஜூன் மாதங்களிலிருந்து தற்போது பொருளாதாரம் வீரியமாக மீண்டுள்ளது என்பதைக் காட்டியது.
"கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவிகிதம் சுருங்கியுள்ளது, அதாவது இந்த நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குள் நுழைகிறது. கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு தொடர்ச்சியான காலாண்டுகளின் எதிர்மறை வளர்ச்சியால் இந்நிலை ஏற்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை துறையின் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?