’வயது வெறும் எண் தான்.. உறுதி மனதில் உள்ளது’ என்பார்கள். அதற்கு உதாரணமாக 82 வயதில் பாரா கிளைடிங் செய்து சாதனை படைத்துள்ளார் துக்மிட் லெப்ஜா என்ற வயதான பாட்டி. சிக்கிமில் உள்ள ராங்காவில் இந்த பாட்டி பாராசூட்டில் பறந்து பலரையும் வாயடைக்கச் செய்துள்ளார். சிக்கிமில் 68 வயதில் பாராசூட்டில் முதியவர் ஒருவர் பறந்ததே அங்கு சாதனையாக இதுவரை இருந்தது. அதனை தற்போது 82 வயது பாட்டி துக்மிட் முறியடித்துள்ளார்.
பாட்டியின் சாதனை குறித்து வியந்து பேசியுள்ள சிக்கிம் சுற்றுலாத்துறை, 82 வயது மூதாட்டி பலருக்கும் ஊக்கமாக உள்ளார் என தெரிவித்துள்ளது. பாராகிளைடிங் என்பது சுற்றுலா வருபவர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்குமென அம்மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மூதாட்டி, இது புதுவித அனுபவமாக இருந்தது. நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். எனக்கு பயம் இல்லை.எனக்கு முன்னால் பாராகிளைடிங் செய்த 17 வயதான என்னுடைய பேத்தி கூட பயந்தார். நான் பறப்பதை போலவே உணர்ந்ததால் எனக்கு பயமே இல்லை என தெரிவித்துள்ளார்.
மூதாட்டி துக்மிட் லெப்ஜா சுமார் 4500 அடிகள் உயரத்தில் 6 நிமிடத்துக்கு மேலாக வானில் பறந்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!