கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவில், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட 37 வயதான முகமது ஆரிஃப் மொஹியுதீன் என்னும் நபர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசிக்கும், ஹைதராபாத்தின் சஞ்சல்குடாவைச் சேர்ந்த 37 வயதான முகமது ஆரிஃப் மொஹியுதீன் கடந்த சனிக்கிழமையன்று அடையாளம் தெரியாத சிலரால் குத்திக் கொல்லப்பட்டார். ஒரு வணிகப் போட்டிதான் இந்தக் கொலையின் நோக்கம் என்று கூறப்படுகிறது, இறந்தவர் தனது கூட்டாளியுடன் இணைந்து ஜார்ஜியாவில் ஒரு மளிகை கடையை நடத்தி வந்தார், இருவருக்கும் சமீபத்தில் சில கருத்துவேறுபாடுள் ஏற்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரிஃப் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார், இவர் கடைசியாக 10 மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்திற்கு வந்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த கொலையால் ஹைதராபாத்திலுள்ள ஆரிஃப்பின் குடும்பம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. இறந்தவரின் மனைவி மெஹ்னாஸ் பாத்திமா, "அவர் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு என்னை அழைத்திருந்தார். அரை மணி நேரம் கழித்து திரும்ப அழைப்பேன் என்று அவர் கூறினார், ஆனால் அவர் அழைக்கவில்லை. இரவு 11.30 மணி வரை நான் அவரை மீண்டும் மீண்டும் அழைத்தேன், அவர் எனது அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், நான் அவரின் சகோதரிக்கு அழைத்தேன். அவள் அந்த பகுதியில் உள்ள அவரின் நண்பர்களை அணுகி, போலீசாரிடம் விசாரித்து அவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொண்டாள் " எனகூறினார்.
பாதிக்கப்பட்டவரின் மனைவியும், அவரது மாமியார் காஜா மொய்சுதீனும் இந்த விவகாரத்தில் இந்திய தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு அவசர விசாவிற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் “ நாங்கள் உடனடியாக அங்கு செல்ல அரசு உதவவேண்டும்” என்று கொல்லப்பட்டவரின் மனைவி கோரிக்கை வைத்துள்ளார், ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு