விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்!

Vijay-Sethupathi-fan-forum-Massive-action

திண்டிவனம் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் 100 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடையும், கால்பந்தாட்ட வீரர்களுக்கு விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ள நிகழ்வு பாராட்டுகளை குவித்துள்ளது.


Advertisement

image

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் பிரபலமானார் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், நானும் ரெளடிதான், சேதுபதி, சீதக்காதி, தர்மதுரை, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், பேட்ட, சூப்பர் டீலக்ஸ், 96 என நடித்துள்ளவர், தற்போது விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


Advertisement

 image

ரஜினி, விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது போலவே விஜய் சேதுபதிக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டிவனம் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர், ஆட்டோ டிரைவர்கள் 100 பேருக்கு புதிய சீருடைகள் வழங்கியுள்ளனர். 

image


Advertisement

 

அதேபோல கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் விலகினார். அவருக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தினர் உதவி செய்துள்ளது பாராட்டுகளை குவித்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement