அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மன்னிப்பு கேட்ட பாஜகவின் கபில் மிஸ்ரா

BJP-leader--Kapil-Mishra-issues-unconditional-apology-to-Delhi-CM-Arvind-Kejriwal-for-his-Rs-2-crore-bribe-remark

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரிடம் டெல்லி நீதிமன்றத்தில் பாஜகவின் கபில் மிஸ்ரா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.


Advertisement

image

கபில் மிஸ்ரா 2017-ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியால் வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது “ இரண்டுகோடி இலஞ்சம்” பெற்றதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், சத்யேந்தர் ஜெயின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இரண்டுகோடி லஞ்சம் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜெயின் ஆகியோர் மே 5, 2017 அன்று, பிரிவு 500 இன் கீழ் கபில் மிஸ்ரா மீது  அவதூறு வழக்கு பதிவுசெய்தனர்.


Advertisement

கபில் மிஸ்ரா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால், மனுதாரர்கள் வழக்கை திரும்பப்பெற தயாராக இருப்பதாக நீதிமன்றம் கூறியது. இதன்பின்னர் மிஸ்ரா இவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனால் இந்த வழக்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement