’அவன், இவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஓப்பனிங் பாடலை உற்சாகமுடன் இயக்கி முடித்திருக்கிறது படக்குழு. இத்தகவலை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில், விஷால் பெண் கெட்டப்பில் ஒரு பாடலில் நடனமாடி நடிப்பில் மிரட்டியிருப்பார். விஷால், ஆர்யா இருவரும் போட்டிக்கொண்டு சிறந்த நடிப்பை வழங்கினார்கள். இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கும், பெயரிடப்படாத, இப்படத்தின் ஷூட்டிங் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இம்மாத துவக்கத்தில் துவங்கியது. படத்தின் பிரம்மாண்ட ஓப்பனிங் பாடலைத்தான் தற்போது படமாக்கியுள்ளார்கள். இதுகுறித்து,
Successfully cmpletd d grand openin sng sequence n d huge "little India erected set" n Ramoji film city wit 1 of my fav. choreographer @BrindhaGopal1 ws an awesme track composed by @MusicThaman & lyrics by Arivu.#vishal30 #arya32 @arya_offl @anandshank @vinod_offl @RIAZtheboss pic.twitter.com/Mw4cfjXbBI
— Vishal (@VishalKOfficial) October 28, 2020Advertisement
நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் என்னுடைய ஃபேவரைட் நடன இயக்குநர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டரின் நடனத்தில், தமனின் அற்புதமான இசையில் வெற்றிகரமாக பிரம்மாண்ட ஓப்பனிங் பாடலை முடித்திருக்கிறோம்” என்று பாடல் புகைபப்டத்துடன் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், ஓப்பனிங் பாடலை எழுதிய ’தெருக்குரல்’ அறிவு, இயக்குநர் ஆனந்த் ஷங்கர், விஷால், பிருந்தா மாஸ்டர் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.
இயக்குநர் ஆனந்த் சங்கர் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் ‘அரிமா நம்பி’, 2016 ஆம் ஆண்டு விக்ரம், நயன்தாரா நடிப்பில் ‘இருமுகன்’, 2018 ஆம் ஆண்டு விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படங்களை இயக்கியிருந்தார்.
Loading More post
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி