நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த மிஸ்டிரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய டி20 அணியில் ஒரு வீரராக வருண் சக்கரவர்த்தியும் இடம் பெற்றுள்ளார். நேற்று அதனை பிசிசிஐ உறுதி செய்தது.
“எனது மன ஓட்டத்தை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்திய அணிக்காக விளையாட என்னை அழைத்திருப்பது எனக்கு பெரிதினும் பெரிய விஷயம். அணியில் நான் இடம்பிடிப்பேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
INTERVIEW : Surreal to be picked for Australia T20Is: Varun Chakravarthy
The mystery spinner couldn't contain his excitement after being named in India’s T20I squad for Australia tour.
Watch the full interview here -https://t.co/wmVAEPvXAH #TeamIndia #AUSvIND pic.twitter.com/PjD9hmndOZ — BCCI (@BCCI) October 27, 2020
ஆட்டம் முடிந்த பிறகு தான் எனக்கு இந்த விவரம் தெரிய வந்தது. முதலில் கொல்கத்தாவுக்காக ஒரு ஆட்டத்தை கூட மிஸ் செய்யாமல் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. நிச்சயமாக இந்திய அணிக்காகவும் எனது சிறப்பான ஆட்டத்தை கொடுப்பேன்.
என் மீது நம்பிக்கை வைத்து அணியில் என்ன தேர்வு செய்ததற்காக தேர்வு குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி” என வருண் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மழை பொழியும் பேட்ஸ்மேன்கள் கூட இந்த ஐபிஎல் சீசனில் வருணின் சுழலுக்கு முன்னர் சரணாகதி அடைந்து விடுகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 11 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதில், பலம் வாய்ந்த டெல்லி அணிக்கு எதிராக 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
Loading More post
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!