’தடம்’ வெற்றிக்குப்பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளது.
தமிழ் சினிமாவில் தனெக்கென தனி பாணியை கடைப்பிடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் மகிழ் திருமேனி. இயக்குநர் செல்வராகவன், கெளதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்ததாலேயே இவரது கதைகளும் வித்யாசமானவைதான்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முன்தினம் பார்த்தேனே, தடையறக்காக்க, மீகாமன், தடம் என்று கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இவை அனைத்துமே விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படங்கள். இதில், கடந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் வசூல் சாதனை செய்து அருண் விஜய்யை முன்னணி நடிகர்கள் வரிசையில் கொண்டுவந்தது.
இந்நிலையில், மகிழ் திருமேணி அடுத்தப்படம் எப்போது இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில், தனது அடுத்தப்படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கவிருக்கிறார் என்று தகவல் முன்பே வெளியானது. ஆனால், கொரோனா சூழலால் படப்பிடிப்புகள் துவங்கவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது. உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகவர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சுசீந்திரன் இயக்கிவரும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஜெயம் ரவியின் 25 வது படமான ‘பூமி’ யில் நிதி அகர்வால்தான் ஜோடி. தமிழில் இப்படத்தில்தான் அறிமுகமானார். இந்தி நடிகையான நிதி அகவர்வால் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரது படங்கள் தமிழில் வெளியாவதற்கு முன்பே, தமிழில் ஜெயம் ரவி, சிம்பு, தற்போது உதயநிதி என நடித்து முன்னணி நடிகையாகிவிட்டார்.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!