சந்திக்க சென்றபோது கிணற்றில் தள்ளிவிட்ட ‘இன்ஸ்டா’ நண்பன்- 3 நாட்களாக அங்கேயே தவித்த பெண்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான ஆண் நண்பரை சந்திக்க சென்ற இளம்பெண்ணை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார் அந்த நபர்.


Advertisement

image

கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், ஆதர்ஷ் என்ற 22 வயது நபரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக நண்பராகி உள்ளார். ஆதர்ஷின் அழைப்பை ஏற்ற அந்த பெண் அவரை சந்திக்க பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் வந்திருந்தார். அன்று மாலை 5.30 மணியளவில் தேவனஹள்ளியில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஏ ரங்கநாதபுரம் கிராமத்திலுள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார் ஆதர்ஷ். பண்ணை வீட்டிற்கு சென்றபின் ஆதர்ஷ் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார், ஆனால் அவர் அதனை நிராகரித்ததால், அவர் அந்தப் பெண்ணை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு இரவு 7:30 மணியளவில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


Advertisement

அவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்ட மூன்று நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு ஒரு கிரேன் வந்து அந்த பெண்ணை கிணற்றிலிருந்து மீட்டது. பிறகு அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது குற்றவாளியான ஆதர்ஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement