திண்டுக்கல் சிறுமி கொலை : தமிழக அரசு மேல்முறையீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.


Advertisement

திண்டுக்கல்லைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement