‘ஓவர் த்ரோவ்’ : பிறந்த நாளான்று ஹர்திக் மீது கடுப்பான குருனல்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிறந்த நாள் அன்று ஹர்திக் பாண்ட்யா மீது அவரது அண்ணன் குருனல் பாண்ட்யா ஓவர் த்ரோவ் வீசியதற்காக கோபத்தை வெளிப்படுத்தினார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குருனல் பாண்ட்யா 4 ஓவர்களுக்கு 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார். அவர் பந்துவீசிய போது அரிதான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது தனது தம்பியான ஹர்திக் பாண்ட்யா மீது குருனல் பாண்ட்யா கோபப்பட்டார். இத்தனைக்கு நேற்று ஹர்திக் பாண்ட்யாவின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

image


Advertisement

டெல்லி முதல் பேட்டிங் செய்தபோது, 7வது ஓவரை குருனல் பாண்ட்யா வீசினார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை அடிக்க அது ஹர்திக் பாண்ட்யாவிடம் சென்றது. அதை எடுத்த வேகத்தில் பந்துவீசிய குருனல் பாண்ட்யாவிடம் ஹர்திக் வீசினார். ஆனால் அதை குருனல் பாண்ட்யாவால் பிடிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக ஒரு ரன்னை ஸ்ரேயாஸ் ஐயர் ஓடி எடுத்தார். அப்போது கோபத்தில் குருனல் பாண்ட்யா ஹர்திக் பாண்ட்யாவை பார்த்து கத்த, அவரும் பதிலுக்கு தன் மீது தவறு இல்லை என்பதைப்போல கோபப்பட்டார்.


Advertisement

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement