உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் உள்ளூர் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரையில், வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்ற புதிய எதார்த்தத்துக்கு வந்தன. மார்ச் மாதம் முதலே பல நாடுகளில் வீட்டில் இருந்து பலரும் அலுவலக வேலைகளைச் செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில், பணியாளர்கள் விரும்பினால் நிரந்தரமாகவே வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆலோசித்துவருகிறது. அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தற்போது வரை வீட்டில் இருந்தே பலரும் பணியாற்றி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி வரையில் யாரும் அலுவலகம் வரவேண்டாம் என ஏற்கெனவே அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
"புதிய வழிகளில் வாழவும் வேலை செய்யவும் கொரோனா தொற்று நம் எல்லோருக்கும் சவால் விட்டுள்ளது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி கேத்லீன் ஹோகன்.
அதாவது வீட்டில் இருந்து பணியாற்ற விரும்பும் பணியாளர்கள், அவர்களது மேலாளர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும். அதேநேரத்தில், மேலாளர்களின் அனுமதி இல்லாமலும் வேலை செய்யலாம். ஆனால், வாரத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்றமுடியும் என்று மைக்ரோசாப்ட் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெறமுடியாது. சிலர் அதற்குத் தகுதியானவர்கள் கிடையாது. மைக்ரோசாப்ட் சோதனைக்கூடங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்குபவர்கள் வீட்டில் இருக்கமுடியாது.
பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ’இரண்டாம் குத்து’ பட இயக்குநர்
Loading More post
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்