பகுதிநேர பொறியியல் படிப்பு: அக். 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் உள்ள 9 பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பிடெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 12 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

2020-21 ஆம் கல்வி ஆண்டு பகுதிநேர பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதொடர்பாகப் பேசிய பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ். இளங்கோ, "அக்டோபர் 12 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

image


Advertisement

சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சிஐடி கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

விவரங்களுக்கு: www.ptbe-tnea.com

2 ஆண்டு காத்திருப்பு: சிஎஸ்கே அணியில் விளையாடும் தமிழக வீரர் ஜெகதீசன்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement