நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது. சமூகத்தினரால் ஒதுக்கப்படும் திருநங்கைகள் படும் கஷ்டத்தையும் புறக்கணிப்புகளையும் சரத்குமார் திருநங்கையாக நடித்து மக்கள் மனங்களை மாற்றியிருப்பார். தமிழில் வெற்றிப் பெற்ற இப்படத்தை இந்தியில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார், கியாரா அதிவானி நடிக்க இயக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தியேட்டர்கள் இன்னும் திறக்கவில்லை. அதனால், ஓடிடியில் வெளியிடுகிறார்கள். ஆனால், லக்ஷ்மி பாம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு நாடுகளில் நவம்பர் 9 அன்று தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
https://www.youtube.com/watch?v=xw0gE8QA1W0
இந்நிலையில்,இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு வரவேற்பும் விமர்சனங்களும் வெளிவந்த நிலையில், லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரைய்லர் புதிய சாதனையை படைத்துள்ளது, ட்ரைலர் வெளியான 24 மணிநேரத்தில் இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுவரை 80 மில்லியன் மக்கள் இதன் ட்ரைலரை பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அதிக மக்கள் பார்க்கும்போது இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை