தோனி சிறந்த பினிஷர்தான். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலை அவருக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரயன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவுடனான தோல்விக்கு பின்பு சிஎஸ்கே குறித்து ல்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய லாரா "தோனியால் போட்டியை பினிஷ் செய்ய முடியவில்லை என சொல்ல முடியாது. தோனி தனக்கான வாய்ப்புகளை முன்பு அப்படி ஏற்படுத்திக் கொண்டார். இப்போதை சூழ்நிலை அவருக்கு சரியாக அமையவில்லை. போட்டியை முடிப்பதற்கு தன்னை தவிர்த்து வேறு சில வீரர்களையும் அவர் பார்க்க வேண்டும்" என்றார்.
மேலும் "பிராவோ ஒரு திறமையான ஆல் ரவுண்டர். ஆனால் இன்றையப் போட்டியில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி 10 ஓவரில் 58 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும். ஆனால் 10 விக்கெட்டுகளை இழக்கிறார்கள். இதில் ஏதோ பிரச்னை இருக்கிறது. இன்றையப் போட்டியில் ஜடேஜாவும் ஒரு நல்ல பினிஷராகவே தெரிந்தார். ஆனால் ஆட்டத்தின் கடுமையான கட்டத்தில் அவரால் என்ன செய்ய முடியும்" என்கிறார் லாரா.
இறுதியாக பேசிய அவர் "முதல் 10 ஓவரில் சிறப்பாக விளையாடிவிட்டு. அடுத்த 10 ஓவரில் தோல்வியை தழுவுவதையெல்லாம், என்னால் நம்ப முடியவே இல்லை" என்றார் லாரா.
Loading More post
அதிமுக தேர்தல் அறிக்கை: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?