ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்? எப்போது வெளியாகிறது தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் ஹீரோயினாக மட்டுமே ஜோடி சேர்ந்த நயன்தாரா, முதன் முறையாக கடந்த 2015 ஆம் ஆ ண்டு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘மாயா’ படத்தில் மாஸ் காட்டினார். மாயா கொடுத்த மாபெரும் வெற்றியில் தொடர்ச்சியாக டோரா,கொலையுதிர் காலம், அறம்,கோலமாவு கோகிலா,இமைக்கா நொடிகள் என நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து நாயகிகளாலும் வெற்றியைக் கொடுக்க முடியும்… நாயகிகளுக்காகவும் ரசிகர்கள் வருவார்கள் என்பதை அறத்துடன் நிரூபித்தார்.

image


Advertisement

இந்நிலையில், காமெடி நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே பாலாஜி, என்.ஜே சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ள மூக்குத்தி அம்மன் வரும் தீபாவளி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே, ஆர்.ஜே பாலாஜியின் முதல் படமான எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் ஃபிலிம் இனடர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement