"என் குறைகளுடன் அழகாக இருக்கவேண்டியவள் நான்" - நடிகை இலியானாவின் அழகு தத்துவங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரு பூக்கொடியைப் போல அழகாக தோன்றுபவர் நடிகை இலியானா. தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த அவர், தற்போது பாலிவுட் பக்கம் கவனம் காட்டுகிறார். அபிஷேக்பச்சனுடன் சேர்ந்து நடித்த 'தி பிக் ஃபுல்' என்ற இந்திப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், தன் உடல் பற்றிய கருத்துகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளார் இலியானா.


Advertisement

"நான் எப்படி தெரிகிறேன் என்பது பற்றி நான் எப்போதும் கவலைப்படுவேன். என் அகலமான இடை, தளர்வான தொடைகள், தேவையான அளவு குறுகலாக இல்லாத விலா, தட்டையாக இல்லாத வயிறு, நேராக இல்லாத மூக்கு, உதடுகள் முழுமையாக இல்லை என நான் கவலைப்பட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

image


Advertisement

"நான் தேவையான உயரத்தில் இல்லை, அழகு இல்லை, புத்திசாலித்தனம் இல்லை என்றும் கவலைப்பட்டிருக்கிறேன்" என்று கூறும் இலியானா, "நான் என் குறைகளுடன் அழகாக இருக்கவேண்டியவள். வித்தியாசமான, தனித்துவமான பெண்ணாக இருந்திருக்கவேண்டும். ஒவ்வொரு தழும்பும், வீக்கங்களும், குறைகளும் என்னை உருவாக்கியுள்ளன. எனக்கே எனக்கான அழகை உருவாக்கியுள்ளன" என்றும் கவித்துவமாகப் பதிவிட்டுள்ளார்.

image

"இந்த உலகம் அழகு என்று எதை வரையறுத்து வைத்துள்ளதோ அதற்குள் என்னை பொருத்திக்கொள்வதை நிறுத்தினேன். தனித்துவமாக இருக்க நான் பிறந்திருக்கும்போது ஏன் அதில் பொருந்திப்போகவேண்டும்" என்று முடித்துள்ளார் இலியானா.


Advertisement

 

 
 
 
View this post on Instagram

I’ve always worried about how I looked. I’ve worried my hips are too wide, my thighs too wobbly, my waist not narrow enough, my tummy not flat enough, my boobs not big enough, my butt too big, my arms too jiggly, nose not straight enough, lips not full enough..... I’ve worried that I’m not tall enough, not pretty enough, not funny enough, not smart enough, not “perfect” enough. Not realising I was never meant to be perfect. I was meant to be beautifully flawed. Different. Quirky. Unique. Every scar, every bump, every “flaw” just made me, me. My own kind of beautiful. That’s why I’ve stopped. Stopped trying to conform to the world’s ideals of what’s meant to be beautiful. I’ve stopped trying so hard to fit in. Why should I?? When I was born to stand out. #nophotoshop #nobs ? @colstonjulian

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

ஒரு சாலையின் பாடல்: அடல் ரோடங் சுரங்கப்பாதையின் அழகிய புகைப்படங்கள்!

 

loading...

Advertisement

Advertisement

Advertisement