நெடுந்தீவு அருகே எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் அவர்கள் சிறைபிடித்துச் சென்றனர்.
நெடுந்தீவு அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் மூழ்கடித்துள்ளனர். காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை தமிழக மீனவர்களின் 153 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 53 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிவரும் நிலையில், இந்த கைது சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!