கொடைக்கானலில் ’விக்ரம் 60’ படப்பிடிப்பு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

தனுஷ் நடித்துவரும் ’ஜகமே தந்திரம்’ படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக இயக்கவிருக்கும் ’விக்ரம் 60’ படத்தை கொடைக்கானலில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

image


Advertisement

இன்னும் பெயரிடப்படாத ’விக்ரம் 60’ படத்தில் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளார். துருவ் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடிக்கவுள்ள, இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கான இடங்களை கார்த்திக் சுப்புராஜும் அவரது  உதவி இயக்குநர்களும் சமீபத்தில் கொடைக்கானல் சென்று  பார்த்து வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

image

ஏற்கனவே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி தயாரித்த மெர்குரி படமும், அவர் தயாரிப்பில் ஓடிடியில் வெளியான பென்குயின் படமும்  கொடைக்கானலில்தான்  எடுக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விக்ரம் நடித்துவரும் கோப்ரா படபிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 60 சதவீதம் முடித்துள்ளது. இரண்டுப் படங்களையும் முடித்தபின்னர் ‘விக்ரம் 60’ படக்குழு கொடைக்கானலுக்கு செல்லவுள்ளது!


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement