அமெரிக்காவில் ரஜினி எடுத்த செல்ஃபி வீடியோ!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோ சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

காலா, 2.0 படங்களில் நடித்துவரும் ரஜினி, மருத்துவம் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு காரை ஒருவர் ஓட்ட அருகில் ரஜினி அமர்ந்தவாறு பேசிக்கொண்டே வேகமாக செல்வது போல அந்த செல்ஃபி வீடியோ உள்ளது. காலா படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவுற்றுள்ள நிலையில் ரஜினி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சோதனைகளுக்கு பிறகு அடுத்த வாரம் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

முன்னதாக, அமெரிக்காவில் ஒரு சூதாட்ட கிளப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வெளியானது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் ரஜினிகாந்த் சூதாட்ட கிளப்பிலும், காரில் செல்ஃபி வீடியோ எடுத்து கொண்டும் ஜாலியாக இருக்கிறார் என்ற கோபத்தில் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement