காதலனுடன் சென்ற பெண்... காதலனின் உறவினர் வீட்டை சூறையாடிய 7 பேர் கைது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காதலனுடன் மகள் சென்றதால் காதலனின் உறவினர் வீட்டை சூறையாடியுள்ளனர். இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement

image

சென்னை புரசைவாக்கம் பொன்னன் தெருவைச் சேர்ந்தவர் சுமதி. இவர் கடந்த 10-ம் தேதி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தன்னுடைய 19 வயது மகளை காணவில்லை. அவளை காவல்துறையினர் கண்டுபிடித்துத் தரவேண்டும் என புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாணையில் காணாமல் போன இளம்பெண் புரசைவாக்கம் ஆர்.கே.புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சக்திவேல் என்பவரை காதலித்து அவருடன் சென்றது தெரியவந்தது. 


Advertisement

 

image

இதையறிந்த பெண்ணின் பெற்றோரான முரளி-சுமதி தம்பதியினர் கடும் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தனர். மேலும் சக்திவேல் நடவடிக்கைகள் சரியில்லை என்றும் தனது மகளை மீட்டு கொடுக்கும்படியும் போலீசில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் பெண்ணின் தந்தை முரளிக்கு ஆதரவாக சுமார் 30 நபர்கள் பட்டா கத்தியுடன் ஆர்.கே.புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் உள்ள சக்திவேலின் உறவினர் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களை மிரட்டி பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

 

 

image

 இது தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி தாக்குதல் நடத்திய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர் தினேஷ்குமார், அன்பரசன், நந்தா, கார்ஓட்டுனர் பிரபாகரன், சத்தியமூர்த்தி, மனோஜ்குமார், பிரபாகரன், ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது 143- சட்டவிரோதமாக கூடுதல், 148- பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், 149-சட்டவிரோத கும்பல், 294(டி)- ஆபாசமாக திட்டுதல், 323- காயம் ஏற்படுத்துதல், 324-பயங்கர ஆயுதங்களால் காயம் ஏற்டுத்துதல், 506(2)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தை முரளி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement