முதல்வரின் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஆப்சென்ட்: ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தும் ஓபிஎஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதல்வர்  பழனிசாமி நடத்தும் அரசு கூட்டங்களில் வழக்கமாக பங்கேற்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பங்கேற்கவில்லை.


Advertisement

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திவரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில்  ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம் நடந்த சூழலில் இன்று ஆலோசனை நடைபெறுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு தெரியும் என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement