[X] Close >

காவலர்கள் காயமடைந்தால் செலவீனத்தை அரசு ஏற்குமா? - ஆர்.டி.ஐ. கேள்விக்கு காவல்துறை பதில்!

Will-the-government-accept-the-cost-if-the-police-are-injured-rti--Police-answer-to-the-question

காவலர்கள் பணியின் போது படுகாயமடைந்தால் அதற்கான மொத்த செலவீனங்களையும் அரசு ஏற்பதற்கு அத்தகைய விதியோ நடைமுறையோ எதுவுமில்லை என தமிழக காவல்துறை ஆர்.டி.ஐ. கேள்விக்கு பதிலளித்துள்ளது.


Advertisement

தமிழக காவலர்கள் பணியில் ஈடுபடும் நேரங்களில் திடீரென அசம்பாவிதம் ஏற்பட்டால் சிறப்பு இயலாமை விடுப்பு, மருத்துவ விடுப்பு வழங்கப்படுகின்ற விவரங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.  அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் தமிழக காவல் துறையிடமிருந்து தகவல் பெறப்பட்டு பிரத்யேகமாக ‘புதிய தலைமுறை’க்கு வழங்கியுள்ளார் அதில் காவல்துறை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன

கேள்வி: தமிழக காவலர்கள் பணியின்போது திடீரென சாலை விபத்தில் படுகாயமடைந்தோ அல்லது எதிரிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தாலோ மருத்துவ சிகிச்சை எடுப்பவர்களுக்கு மருத்துவ விடுப்பு எத்தனை நாட்கள் வரை வழங்கப்படும்? 


Advertisement

பதில்: தமிழக காவலர்களுக்கு பணியின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் சிறப்பு இயலாமை விடுப்பானது மருத்துவக் குழுமத்தின் பரிந்துரையின் பெயரில் 24 மாதத்திற்கு விடுப்பு வழங்கப்படும்.மேலும் காவலர்களின் தகுதிகாண் பருவத்தில் 2 ஆண்டுகள் பணி முடிந்த பின்னரே இந்த ஈட்டா மருத்துவ விடுப்பு பெற காவலர்களுக்கு தகுதி உண்டு.

தகுதிகாண் பருவம் முடிந்தவருக்கு மருத்துவச் சான்றின் அடிப்படையில் 2 வருடங்கள் இருந்து 5 வருடங்களுக்கு 90 நாட்களும், 5 வருடங்களில் இருந்து 10 வருடங்களுக்கு 180 நாட்களும், 10 வருடங்களில் இருந்து 15 வருடங்களுக்கு 270 நாட்களும், 15 வருடங்கள் இருந்து 20வருடங்களுக்கு 360 நாட்களும், 20 வருடங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு 540 நாட்களும் அனுபவிக்க தகுதி உண்டு. இருப்பினும் 60 நாட்களுக்கு மேல் மருத்துவ விடுப்பு எடுப்பவர்களுக்கு மருத்துவ குழுமத்திற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

கேள்வி: தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறும் காவலர்களுக்கு எத்தனை நாட்கள்வரை முழு ஊதியம் வழங்கப்படும் எத்தனை நாட்களுக்கு மேல் கடந்து போனால் பாதி ஊதியமாக அல்லது ஊதியம் நிறுத்தப்படும்?  


Advertisement

பதில்: சிறப்பு இயலாமை விடுப்பிற்கு 120 நாட்கள் அதாவது 4மாதங்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் அதன் பிறகு அறை சம்பளமும் வழங்கப்படும். அதிகபட்ச மருத்துவ குழுவின் பரிந்துரைப்படி 24 மாதங்களுக்கும் இயலாமை திரும்ப தோன்றுமாயின் மீண்டும் வழங்கப்படலாம் தகுதிகாண் பருவம் முடிக்காதவருக்கு 30 நாட்கள் மட்டுமே முழு ஊதியம் வழங்கப்படும். மொத்த பணி காலத்தில் 20 வருடத்திற்கு மேல் இருந்தால் ஈட்டா மருத்துவ விடுப்பிற்கு முழு சம்பளம் வழங்கப்படும்

கேள்வி: தமிழக காவலர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ காப்பீட்டில் சம்பளத்திலிருந்து எவ்வளவு ரூபாய் பிடிக்கப்படுகிறது?  

பதில்: மருத்துவ காப்பீடு சந்தா தொகை மாதம் 180 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது நான்கு ஆண்டுகளில் நான்கு லட்சம் வரையும் சிறப்பு சிகிச்சைக்கு 7.5 லட்சம் வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது

கேள்வி: பணியின் போது பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஏற்படும் மொத்த செலவையும் அரசே ஏற்குமா?  

பதில்: பணியின் போது பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஏற்படும் மொத்த செலவினங்களையும் அரசு முடிவு செய்யும் அத்தகைய விதியோ நடைமுறையோ எதுவுமில்லை என தமிழக காவல்துறை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதில் அளித்துள்ளது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close