“பணி செய்யவிடாமல் தொந்தரவு; செல்போனுக்கு ஆபாச படங்கள்” - பெண் அலுவலக உதவியாளர் தர்ணா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவில்பட்டியில் மாவட்ட கல்வி அலுவலக பெண் உதவி அலுவலரை, மேற்பார்வையாளர் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் வேலைப்பார்க்கும் அதே அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் என்னை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்து வருகிறார். 7 வருஷமாக இதுபோன்ற தொந்தரவுகள் இருக்கின்றன. மற்ற ஊழியர்கள் என்னுடன் பேசுவதை தடுத்து வருகிறார். மேலும் எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாச படங்கள் வருகின்றன.


Advertisement

image

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே அளித்த புகாரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மண்ணென்னை ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என புகார் அளித்துள்ளேன். ஆனால் நடவடிக்கை இல்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என குற்றம் சாட்டியுள்ளார்.

image


Advertisement

இது குறித்து தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். முறையாக புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத்தொடர்ந்து ஜெயா போராட்டத்தினை கைவிட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement