அழிவின் விளிம்பில் அரிய வகை சளை மரங்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளரும் அரிய வகை சளை மரங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Advertisement

குமரி மாவட்டத்தில் சில காலங்களுக்கு முன்பு  கிராமப்புற மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த மரம்தான் சளை மரங்கள். இந்த மரத்தில் காய்க்கும் சளை காயை பறித்து தரப்படுத்தி அதை மாவாக மாற்றி அந்த மாவில் தோசை, புட்டு, கொழுக்கட்டை என சர்க்கரையுடன் சேர்த்து பல்வேறு வகையிலான தின்பண்டங்களை தயாரித்து ஒரு நேர உணவாக குமரி மாவட்டத்தை சேர்ந்த அதிகமான மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த சளைக் காய் மருத்துவ குணம் கொண்ட உணவாக இருந்ததாக இதை முன்காலங்களில் உணவாக தயாரித்து சாப்பிட்டு வந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் ரப்பர் விவசாயத்தில் குமரி மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியதும் விவசாய நிலங்களில் நின்ற இந்த சளை மரங்களை அப்புறப்படுத்தியதால் தற்போது இந்த சளை மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.


Advertisement

image

இந்த காட்டுப்பகுதியில் வளரும் சளை மரங்களில் காய்க்கும் சளை காயை மலைவாழ் மக்கள் பறித்து பருவப் படுத்தி அவர்கள் பல்வேறு உணவுகளை தயாரித்து சாப்பிட்டு வருவதுடன் விற்பனையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மிக அரிதான சளை மரம் மாவட்டத்தின் மலையோர கிராமமான குலசேகரம் பகுதியில் உள்ள வனசரக அலுவலக வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரேன்ஜர் ராஜன் பாபு என்பவர் புலியூர் குறிச்சி என்ற பகுதியில் யாரோ வெட்டி வீசப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான சளை மரத்தை எடுத்து வந்து நடவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த மரத்தில் சளைக் காய் காய்த்துள்ளது.


Advertisement

imageஇதுபோல் குலசேகரம் பகுதியில் ஒரு வீட்டின் முன்புறம் மிக பழமையான ஒரு சளை மரமும் காய்த்து நிற்கிறது. இந்த காய் கார்த்திகை மாதத்தில் முழுமையாக விளைந்து பருவமாகும். இந்த சளை மரம் நடவு செய்து நூறு ஆண்டுகளுக்கு பிறகு தான் காய்க்கும் தன்மையுடையது.

நாளைய தலைமுறைக்கு இப்படி ஒரு மரம் நமது பகுதியில் வளர்ந்தது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, இந்த மரங்களைப் பாதுகாப்பது மற்றும் நடவு செய்வது குறித்து விவசாயிகள், மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குமரி மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement