45 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட 6 பேர்மீது பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வழக்கின்பேரில் 3 பேரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் திஜாரா பகுதியில் செப்டம்பர் 14ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹரியானாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, தனது மருமகனுடன் இரு சக்கரவாகனத்தில் திரும்பி வரும்போது திஜாரா என்ற பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் இவர்களது வாகனத்தை, கூர்மையான ஆயுதங்களைக் காட்டி வழிமறித்துள்ளனர்.
ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும்போது மற்றவர்கள் தடுக்கமுயன்ற அந்த பெண்ணின் மருமகனைப் பிடித்து அடித்துள்ளனர். ஒவ்வொருவராக மாறி மாறி அந்தப் பெண்ணைத் தாக்கியபின், அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் முதலில் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்ட பிறகு, அந்தப் பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் 6 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 3 பேரும் விரைவில் கண்டுபிடித்து கைது செய்யப்படுவர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி